வங்கி மேலாளர் பேசுவதாகக் கூறி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!

புதுச்சேரியில், வங்கி மேலாளர் பேசுவதாகக் கூறி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
குரும்பாபேட் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை அளித்த புகாரில், ஏ.டி.எம்.கார்டு புதுப்பிக்க வேண்டும் என்று தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாக கூறியதை நம்பி ஓ.டி.பி.தெரிவித்ததால் 96 ஆயிரத்து 250 ரூபாய் பணத்தை வங்கி கணக்கில் இருந்து மர்ம நபர்கள் திருடிவிட்டதாகக் குறிப்பிட்டார்.
இதேபோல், நெட்டப்பாக்கம், லாஸ்பேட்டை பகுதியிலும் மர்மநபர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
Comments