குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் தாம் தூக்கில் தொங்கி விடவும் தயார்-கெஜ்ரிவால் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்திய சுகேஷ் சந்திரசேகர்

0 1631

பல கோடி ரூபாய் மோசடி வழக்குகளில் சிக்கி டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சுகேஷ் சந்திரசேகர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

வழக்கறிஞர் மூலம் டெல்லி துணை நிலை ஆளுநருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ஆம் ஆத்மி கடசி அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் மூலம் கெஜ்ரிவால் பணம் திரட்டியதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ள சுகேஷ். விசாரணையில் கெஜ்ரிவால் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் தாம் தூக்கில் தொங்கி விடவும் தயார் என்று கூறி உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments