இதுக்கு பெயர் தான் ஓடுற தண்ணில எழுதுறதா ? நல்லா வருவீங்க ஆபிசர்ஸ்..! தண்ணீருக்குள் கொட்டப்பட்ட கலவை..!

0 3811

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டையில் மழை நீரை வெளியேற்றாமல் காங்கிரீட் கலவையை முழங்கால் அளவு தண்ணீரில் கொட்டி விஞ்ஞான முறையில் மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டது

தாம்பரம்  மாநகராட்சிக்குட்பட்ட, குரோம்பேட்டை, 36 வது வார்டு புருஷோத்தம நகர், இரண்டாவது பிரதான சாலை மூன்றாவது  தெருவில் தான் இந்த விஞ்ஞான ரீதியிலான வினோத மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு வந்தது..!

அடுத்த மழை வருவதற்குள் கான்கிரீட் கலவை மிஷினில் போடப்பட்ட கலவை அனைத்தையும் கால்வாய்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் கொட்டுவதில் வேகமாக இருந்தனர் அந்த ஒப்பந்த பணியாளர்கள்

முழங்கால் அளவு தண்ணீரில் சிமெண்டு கலவையை கொட்டினால் எல்லாம், தண்ணீரோடு போய்விடுமே..? கால்வாய் எப்படி பலமானதாக இருக்கும் ? என்ற எந்த ஒரு சிறு சந்தேகமும் எழாமல் ஒப்பந்ததாரர் உத்தரவின்படி காரணமே கேட்காமல் கலவையை தண்ணீருக்குள் கொட்டிக் கொண்டிருந்தனர்

தண்ணீருக்குள் கலவையை கொட்டி வீணடித்த அதே வேகத்தில் தண்ணீருக்குள் தரை தளம் செட்டாகி விட்டது போல பலகைகளை கொண்டு பக்கவாட்டு காங்கிரீட் சுவர் அமைப்பதற்காக தண்ணீருக்குள் பலகைகளையும் இறக்கினர்

இதனை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதை அடுத்து, தேங்கிய மழை நீரை முழுவதும் வெளியேற்றாமல் கான்கிரீட் கலவைகளை கொட்டி தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞான கால்வாய் பணிகளை தடுக்க தவறிய இளநிலை பொறியாளர் வெங்கடேசன் என்பவரை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments