பேருந்தில் பட்டாக்கத்தியுடன் ரகளை செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது..!

0 1479

சென்னை வியாசர்பாடியில் பேருந்தில் இளைஞர்கள் பட்டாக்கத்திகளை வைத்து ரகளை செய்த வீடியோ வெளியான நிலையில், இரண்டு கல்லூரி மாணவர்களை, போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

கடந்த மாதம் 28ம் தேதி ரெட்ஹில்ஸிலிருந்து வள்ளலார் நகர் வரை செல்லும் பேருந்து, வியாசார்பாடி எருக்கஞ்சேரி ஹைரோடு பகுதியாக சென்றுக்கொண்டிருந்தது.

அப்போது படிக்கட்டில் நின்றபடி, மாணவர்கள் பட்டாக்கத்திகளை சாலையில் தேய்த்தவாறு ரகளை செய்து, பொதுமக்களை அச்சுறுத்தியவாறு சென்றுள்ளனர்.

வீடியோ காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், ரகளையில் ஈடுபட்டவர்கள் திருவள்ளூரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தீபன், சாரதி என்பது தெரிய வந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments