கோவையில் எலிக்காய்ச்சலால் 5 மாத கர்ப்பிணி உயிரிழப்பு..!

0 1535

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்.

பணிக்கம்பட்டி பகுதியை சேர்ந்த 23 வயதான வனிதாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஓரளவு காய்ச்சல் குணமானதால் வீடு திரும்பியுள்ளார்.

மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கடந்த 31-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வனிதாவிற்கு ரத்த அழுத்தம் குறைவாக இருந்ததுடன், காய்ச்சலும் அதிகமாக இருந்துள்ளது.

எலிக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில்,தொடர்ந்து சிகிச்சை அளித்தும் கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த பெண் இருந்த பகுதிகளில், சுகாதாரத்துறையினர் காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments