ஓட்டலில் மட்டன் சுக்கா கேட்டு பொருள்களை சூறையாடிய 6 பேர் கும்பல்..!

0 6334

சென்னை அண்ணாநகரில் உள்ள ஹோட்டலில் மட்டன் சுக்கா கேட்டு பொருட்களை மதுபோதையில் சூறையாடிய 6 பேர் கும்பலை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

மேற்கு 2-வது அவென்யூவில் உள்ள சோழன் மெஸ் உணவகத்திற்கு மதுபோதையில் 6 பேர் வந்தனர். மதிய நேரத்தை கடந்துவிட்டதால் உணவு தீர்ந்துவிட்டதாக ஊழியர்கள் கூறிய நிலையில், மட்டன் சுக்கா கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் ஆபாசமாக பேசியபோது, வாடிக்கையாளர் ஹரிதாஸ் என்பவர், பெண்கள் இருப்பதை சுட்டிக்காட்டி தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல், ஹரிதாஸை தாக்கியுள்ளனர். மேலும், அங்கு இருந்த மேஜை, நாற்காலி உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கியதால், வாடிக்கையாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments