அரியலூர் அருகே 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை..! மாமனார், கணவர் கைது
அரியலூர் அருகே 5 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மாமனார் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கணவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த அபிராமி வெத்தியார் வெட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் விஜய் பிரகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்தி வந்தார், சில தினங்கள் முன் மாமனார் கலியமூர்த்தியுடன் தகறாறு செய்த மனைவி அபிராமியை கணவர் விஜய் கண்டித்து உள்ளார்.
இதனால் வருத்தமடைந்த அபிராமி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு இறந்துவிட்டார். இந்த வழக்கில் கலியமூர்த்தியை தொடர்ந்து விஜய்யையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
Comments