கணவரிடம் தவறான தொடர்பு வைத்திருந்ததாக, பக்கத்து வீட்டுப் பெண்ணை கட்டிப்போட்டு கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது..!

0 2052

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கணவருடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாக பக்கத்து வீட்டுப் பெண்ணை கட்டிப்போட்டு கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது செய்யப்பட்டார்.

பர்கூர் தாமரைக்கரையைச் சேர்ந்த ராஜீ என்பவர் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரை அங்கு வந்த நாகம்மாள் என்பவர் கட்டி போட்டுள்ளார். மேலும் ராஜி தனது கணவர் ராஜாவுடன் தவறான தொடர்பு வைத்திருப்பதாக கூறி அவரை நாகம்மாள் கத்தியால் தலையில் தாக்கியுள்ளார்.

ராஜீயின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரவே, நாகம்மாள் தப்பியோடிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் , நாகம்மாளை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments