சனீஸ்வர பகவான் சன்னதிக்கு தினமும் வருகை தந்து, அபிஷேக பாலை அருந்தி சமூகவலைதளங்களில் வைரலாகும் காகம்
காஞ்சிபுரம் அருகே சனீஸ்வர பகவான் சன்னதிக்கு தினமும் வருகை தரும் காகம் ஒன்று பூஜைக்கு பிறகு அபிசேக பாலை அருந்தி செல்கிறது.
காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள ஊக்கல் பெரும்பாக்கத்தில் நட்சத்திர விருச்ச விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் விநாயகர் சன்னதிகள் தனித் தனியாக அமைக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள சனீஸ்வர பகவான் சன்னதிக்கு வரும் காகம் ஒன்று, சாமியை நோக்கி கா,கா என சத்தம் எழுப்புகிறது. பின்னர் அர்ச்சகர் தரும் அபிஷேக பாலை அருந்திவிட்டு செல்கிறது.
Comments