சென்னையில் தன்னுடன் பள்ளியில் படித்த பெண் தோழியை மிரட்டியவர் கைது..!

0 3119

சென்னை துரைப்பாக்கம் பள்ளியில் முன்பு தன்னுடன் படித்த பெண் தோழியை மிரட்டிய நபரை போலீசார் கைதுசெய்தனர்.

துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தனது வீட்டின் முன் நின்றுகொண்டிருந்தபோது, அவருடன் பள்ளியில் ஒன்றாக படித்த ஒக்கியம் துரைப்பாக்கத்தை சேர்ந்த 21 வயதான கவுதம் வந்துள்ளார்.

அவர் இளம்பெண்ணிடம், தன்னிடம் ஏன் பேசுவதில்லை எனக்கூறியதுடன், பேசவில்லை என்றால் இருவரும் நண்பர்களாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவேன் எனக்கூறி, தகாத வார்த்தையால் பேசி மிரட்டியுள்ளார். இளம்பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் கவுதமை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments