பிரியாணி கடை உரிமையாளரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மாமூல் வசூலித்த 2 ரவுடிகள் கைது..!

0 2788

சென்னை திருமங்கலம் பகுதியில் பிரியாணி கடை உரிமையாளரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மாமூல் வசூலித்த ரவுடிகள் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த அல்பகத் என்பவரின் பிரியாணி கடைக்கு கடந்த வாரம் வந்த 2 பேர் பிரியாணி வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் மிரட்டிச் சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு மீண்டும் வந்த அவர்கள், பிரியாணி கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கல்லாவில் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.

விசாரணையில் அவர்கள் சத்யா சாய் நகரை சேர்ந்த பாலாஜி, பாடி குப்பத்தை சேர்ந்த யுவராஜ் என்பதும், அப்பகுதியில் உள்ள பல கடைகளிலும் அவர்கள் மாமூல் வசூலித்து வந்ததும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments