எங்கள ஏண்டா சூசைடு பாய்ண்டுக்கு கூட்டி வந்த...? தண்ணீர் பிரச்சனைக்கு கே.என்.நேரு தீர்வு

0 4305

சென்னை குன்றத்தூர் அடுத்த சிக்காராய புரம் கல்குவாரி குட்டையை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் கே.என் நேருவிடம் அண்ணே இதற்கு பெயரே சூசைடு பாய்ண்டு தான் என்று அமைச்சர் தாமோ அன்பரசன் சொல்ல, அப்புறம் ஏண்டா எங்கள இங்க கொண்டு வந்தன்னு  நேரு தனக்கே உரிய பாணியில் கேட்டதால் சிரிப்பலை உருவானது.

சென்னை மாங்காடு மற்றும் குன்றத்தூர் பகுதிகளில் தேங்கும் மழைநீரை வடியவைக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆய்வுமேற்கொள்வதற்காக அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைச்சர் கே.என்.நேரு மற்றும் முன்னாள் மந்திய அமைச்சர் டி.ஆர் பாலுவை சிக்கராயபுரம் கல்வாரி குட்டைக்கு அழைத்துச்சென்றார்.

மாங்காடு மற்றும் குன்றத்தூர் பகுதிகளில் தேங்கும் மழை நீரை சென்னை அவுட்டர் ரிங் சாலையின் நடுவில் உள்ள இடைவெளியில் கால்வாய் அமைத்து சுமார் 80 ஏக்கர் பரப்பளவுள்ள கல்குவாரி குட்டையில் கொண்டு வந்து சேர்க்க இருப்பதாகவும், அதனை சுற்றி பாதுகாப்பு சுவர் அமைக்க இருப்பதாகவும் அதிகாரிகள் விளக்கினர்.

அப்போது அமைச்சர் கே.என் நேரு , செம்பரம்பக்கத்தில் விழுந்தால் தெரியும், இங்கே வந்து விழுந்தால் தெரியாது என்று கூற அருகில் நின்ற தா.மோ. அன்பரசன், அண்ணே இதற்கு பெயரே சூசைடு பாய்ண்டு தான் என்று சொல்ல, அப்புறம் ஏண்டா எங்கள இங்க கொண்டு வந்தன்னு கேட்டதால் அங்கு சிரிப்பலை உருவானது.

இங்கு தேக்கப்படும் தண்ணீரை உள்ளூர் மக்களுக்கு விநோயோகிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கே.என் நேரு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

அதே போல சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 250 ஏக்கர் குவாரி குட்டைகளிலும் நீரை தேக்கி மக்கள் பயன் பாட்டிற்கு கொடுக்கலாம் என்று சொல்லப்பட்ட யோசனையும் செயல்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கே.என் நேரு கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments