பாதாள சாக்கடை பணியின் போது மண் சரிந்து 13 அடி ஆழ குழிக்குள் சிக்கிய தொழிலாளி உயிரிழப்பு..!

0 2557

மதுரையில், பாதாள சாக்கடை பணியின் போது, மண் சரிந்து விழுந்ததில் 13 அடி ஆழ குழிக்குள் சிக்கிய தொழிலாளி உயிரிழந்தார்.

மதுரையில் உள்ள 28 வார்டுகளில், 500 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அசோக்நகர் இரண்டாவது தெருவில், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட 13 அடி ஆழ குழியில், மழை நீரும், குடிநீர் குழாய் உடைப்பால் வெளியான தண்ணீரும் தேங்கியது.

தண்ணீரை அகற்றும் பணியில் 5 ஊழியர்கள் ஈடுபட்ட நிலையில், சக்திவேல் என்ற தொழிலாளி மண் சரிந்து விழுந்ததில் குழிக்குள் சிக்கினார்.

தகவலின் பேரில் வந்த தீயணைப்புத்துறையினர், 5 மணி நேர போராட்டத்திற்கு பின் பொக்லைன் இயந்திரம், நவீன உபகரணங்கள் உதவியுடன் சக்திவேலை சடலமாக மீட்டனர்.

இதனிடையே, தொழிலாளி மீது மண் சரிந்து விழுந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments