ஆடு திருடியவர்களுக்கு உதவ வந்ததாக கருதி 3 இளைஞர்கள் மீது சரமாரி தாக்குதல்..!

0 2655

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆடு திருடியவர்களுக்கு உதவ வந்தவர்கள் என்று கருதி 3 பேர் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேட்டைக்காரன் பட்டியில், மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை திருடிவிட்டு தப்பிச் சென்ற 2 பேரை  கிராம இளைஞர்கள் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

அப்போது பைக்கில் பெட்ரோல் தீர்ந்ததால் ஆடுகளை இறக்கிவிட்டுவிட்டு காட்டு பகுதியில் பதுங்கிய இருவரும் தப்பிச் சென்றனர்.

அதன் பின், அந்த பைக்கை எடுக்க 3 இளைஞர்கள் வந்ததால் அவர்களை சுற்றி வளைத்த கிராம இளைஞர்கள் ஆடு திருடியவர்களுக்கு உதவ வந்ததாக கூறி சரமாரியாக தாக்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments