''அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி என்பதில் எந்த குழப்பமும் இல்லை'' - அண்ணாமலை

2024 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கருத்தில் தவறில்லை என்றும், தங்களது கூட்டணியில் குழப்பமில்லை என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
'மோடியின் தமிழகம் ' என்ற புத்தகத்தை வெளியிட்டபின் பேசிய அவர், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பிரசாரத்தை தி.மு.க. நிறுத்த வேண்டும் என்றும், அந்த இட ஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கு பாதிப்பில்லை என்றும் கூறினார்.
மேலும், ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் வரும் 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆயிரத்து 200 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அண்ணாமலை அறிவித்தார்.
Comments