மதுபோதையில் தகராறு செய்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு.. ஒருவர் கைது.!

0 4769

கோயம்புத்தூரில் மதுபோதையில் தகராறு செய்த இளைஞரை அரிவாளால் வெட்டிய மூன்று பேரில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஒலம்பஸ் 80 அடி ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜா இன்று காலை போதை தலைக்கேறிய நிலையில் அப்பகுதியில் சென்றவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வழியாக சென்ற மூன்று பேர் ராஜாவை தாங்கள் வைத்திருந்த அரிவாளால் வெட்டியுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய ராஜாவை அப்பகுதி மக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போலீசார் மேலும் இரண்டு பேரை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments