தமிழகத்தில் 10,11 12 ஆம் வகுப்புக்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு.!

0 7215

தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னையில் பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும் மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெறும் என்றும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவித்தார்.

அதேபோல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும் ஏப்ரல் ஆறாம் தேதி முதல் அதே மாதம் 20ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டைப் போல் அல்லாமல் முழு பாடத்திட்டத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்படும் என்றும் அன்பில் மகேஷ் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments