காதல் கைகூடிய பார்வையற்ற ஜோடிக்கு திருமணம் நடத்தி வைத்த போலீசார்..!

0 3253

காதல் கைகூடிய பார்வையற்ற ஜோடிக்கு, சென்னை வடபழனி கோயிலில், போலீசார் திருமணம் நடத்தி வைத்தனர். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர் பாலு. 

மாற்றுத் திறனாளியான இவர், தன்னுடன் கல்லூரியில் படித்த சக மாற்றுத்திறனாளி தமிழரசியை, கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். 

இவர்களது திருமணம், லயன்ஸ் கிளப் மற்றும் வடபழனி காவல்துறையினர் சார்பாக, வடபழனி கோவிலில் நடத்தி வைக்கப்பட்டது. மணமக்களுக்கு சீர்வரிசையாக ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் தேவையான சீர்வரிசை பொருட்கள் அளிக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments