திருமணம் செய்து வைப்பதற்காக உறவினர்கள் 4 பேர் கடத்தப்பட்ட சிறுமியை.. செல்போன் சிக்னலை வைத்து மீட்ட தனிப்படை போலீஸ்..!

0 2555

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திருமணம் செய்து வைப்பதற்காக கடத்தப்பட்ட சிறுமியை, செல்போன் சிக்னலை வைத்து, 8 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் மீட்டனர்.

சிறுகுடி நல்லகண்டம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியின் உறவினர்கள், அவரை பொன்ராஜ் என்பருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக நேற்று மாலை கடத்திச்சென்றனர்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கரூரில் பொன்ராஜியின் உறவினர் வீட்டில் இருந்த சிறுமியை, போலீசார் நேற்று நள்ளிரவு மீட்டனர். ராமசாமி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments