நடைபயிற்சி சென்ற கேபிள் டிவி ஆப்ரேட்டர் வெட்டி படுகொலை..!

0 20245

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நடைபயிற்சி சென்ற கேபிள் டிவி ஆப்ரேட்டரை கொலை செய்த மர்மநபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

இன்று அதிகாலை மாந்துறை கைலாஷ் நகர் பகுதியில் நடைபயிற்சிக்கு சென்ற மாதவனை வழிமறித்த மர்ம கும்பல், அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது.

தகவலறிந்து வந்து உடலை கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்தியதில், கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக,வருவாய் கோட்டாச்சியரிடம் மாதவன் புகார் அளித்ததால், அந்த முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments