மனைவி அடித்து கொலை.. நாடகமாடிய கணவர் கைது..!

0 3492

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால் சந்தேகப்பட்டு மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு, மின்சாரம் தாக்கி இறந்ததாக நாடமாடிய பலே கணவர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கழனிபாக்கம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மனைவி நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுதாமதி.

இவர்கள் இருவரும் மறைமலை நகரில் தனியார் கம்பெனியில் பணி புரியும் போது காதலித்து 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று முன் தினம் துணிகளை அயன் செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி இறந்ததாகக் கூறி சுதாமதிக்கு அவசர அவசரமாக ரஞ்சித்குமார் இறுதி சடங்குகளை செய்துள்ளார்.

ஆனால் சுதாமதியின் மரணத்தில் சந்தேகம உள்ளது என்றும், அவரை ரஞ்சித்குமார் அடித்து கொலை செய்திருக்கலாம் என்றும் அவரது அண்ணன் சதீஷ்குமார் மதுராந்தகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் மதுராந்தகம் போலீசார் சுதாமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடற்கூறாய்வு அறிக்கையில் சுதாமதி தலையில் பலத்த காயம் மற்றும் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை அடுத்து மருத்துவரின் முதல் கட்ட ஆய்வறிக்கையில் அடிப்படையில் மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித்குமாரிடம் விசாரணை மேற்கொண்ட போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

விசாரணையில், ரஞ்சித் குமார் வேலையை முடித்து வீட்டுக்கு வரும் பொழுது சுதாமதி யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாகவும், இதனால் சந்தேகம் அடைந்து தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட தகராறில் கட்டையால் சுதாமதியின் தலையில் பலமாக தாக்கியதில் பலத்த காயமடைந்து மயங்கி கீழே விழுந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து அவரது கழுத்தை கயிற்றால் இறுக்கியதில் சுதாமதி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதும் கண்டறியப்பட்டது.

இதனை அடுத்து ரஞ்சித் குமாரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். சந்தேக புத்தி காரணமாக மனைவியை கொலை செய்து விட்டு கணவனும் சிறைக்கு சென்ற நிலையில் அந்த 2 குழந்தைகளின் ஆதரவற்ற நிலை காண்போர் நெஞ்சை கரையச் செய்வதாய் இருந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments