டெல்லியில் காற்றின் தரத்தில் ஓரளவு முன்னேற்றம்.. டீசல் வாகனங்கள், தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்..!

0 2149
டெல்லியில் காற்றின் தரத்தில் ஓரளவு முன்னேற்றம்.. டீசல் வாகனங்கள், தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்..!

டெல்லியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து டீசல் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளன.

காற்று மாசு மிகவும் மோசமான நிலைக்குப் சென்றதையடுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது காற்றின் தரம் மேம்பட்டுள்ளதையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இருப்பினும் தொடர்ந்து காற்று மாசு நிலை மோசமானதாகவே இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்க நாளை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments