உலக பாரா பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் தமிழக வீராங்கனை என்ற பெருமை பெற்றார் மனிஷா..!

0 3401

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற உலக பாரா பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழக வீராங்கனை மனிஷா ராமதாஸ் தங்கப்பதக்கம் வென்றார்.

இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை மாமிக்கோ டொயட்டாவை 21-15, 21-15 என்ற நேர் செட்டில் வென்று மனிஷா ராமதாஸ் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

பாரா பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனை மனிஷா பெற்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த ருத்திக் ரகுபதி 2 வெண்கலப் பதக்கமும், நித்யஸ்ரீ 3 வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments