சாலையில் நின்ற குழந்தையை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த மருத்துவருக்கு காவல் ஆணையர் பாராட்டு..!

0 2060

சென்னையை அடுத்த பூந்தமல்லியில், நள்ளிரவில் சாலையில் பரிதவித்தபடி நின்ற குழந்தையை, மருத்துவர் ஒருவர் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார்.

மருத்துவரான நந்தகுமார், பூந்தமல்லி வழியாக காரில் சென்றபோது, 2 வயது குழந்தை ஒன்று சாலையில் அழுதபடி செல்வதை கவனித்துள்ளார்.

குழந்தையை மீட்ட நந்தகுமார், சுற்றும்முற்றும் பெற்றோரைத் தேடிப்பார்த்து கிடைக்காததால், பூந்தமல்லி காவல் நிலையத்தில் குழந்தையை ஒப்படைத்துள்ளார்.

விசாரணையில், குமணன்சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அர்திக் பாஷா - ஆயிஷா பானு தம்பதியினர் மகன் உமர் என்பது தெரியவந்தது.

வீட்டு உபயோகப் பொருட்களை பெற்றோர், காரிலிருந்து லிட்டிற்கு மாற்றி, மேலே கொண்டு போய் வைத்துவிட்டு வருவதற்குள், குழந்தை லிப்டிலிருந்து தானாக இறங்கி, காவலாளிகளை மீறி சாலைக்கு சென்றது, அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments