சொத்து பிரிப்பதில் தகராறு.. தம்பியை அரிவாளால் வெட்டிய சகோதரர்கள்..!

0 2635

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கண்டிகையை சேர்ந்த பிரசாத்திற்கும், அவரது அண்ணன் டில்லி பாபு மற்றும் தம்பிகள் கணேஷ் மற்றும் பிரகாஷ் ஆகியோர் இடையே பூர்விக சொத்து பாகப்பிரிவிணையில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றிரவு டில்லி பாபு உள்ளிட்ட 3 சகோதரர்கள் பிரசாத்தின் வீட்டிற்கு வந்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியும், தடுக்க வந்த மனைவி மயூரியை தாக்கிவிட்டும் தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் தலை, கழுத்து பகுதியில் அரிவாள் வெட்டு பட்டு படுகாயமடைந்த பிரசாத், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments