5 சிறார்கள் ஒரே வாகனத்தில் மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியபடி, ஆபத்தான முறையில் சவாரி..!

0 2276

சென்னையில் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளிடம் வம்பிழுத்து ரகளையில் ஈடுபட்டபடி, ஒரே வாகனத்தில் சென்ற 3 சிறுவர்களை பிடித்த போலீசார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

சாலையில் ஆபத்தான முறையில் சிறுவர்கள் உட்பட 5 பேர் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்வதை வீடியோவாக எடுத்து பெண் ஒருவர் காவல்துறையிடம் சமூக வலைதளத்தின் வாயிலாக புகார் அளித்தார்.

இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவரின் பின்னந்த தலையில் தட்டி, பதைபதைக்க வைத்தபடி, சிறுவர்கள் வாகனத்தை ஓட்டிய காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றது.

வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்திய போலீசார், அந்த வாகனம் பரங்கிமலையில் திருடுபோனதாக ஏற்கனவே புகார் பதிவாகியிருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து, 3 சிறுவர்களை பிடித்த போலீசார், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments