சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது அரசு பேருந்து மோதி விபத்து..!

0 2479

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே, சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது, அரசு பேருந்து மோதிய காட்சி, சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

கடந்த 4ம் தேதி மகாராஜன் என்ற முதியவர், கவனக்குறைவுடன் சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த அரசு பேருந்து மோதியதில் தூக்கிவீசப்பட்டார்.

உடனே கீழே இறங்கிவந்து பார்த்த நடத்துநர், பொதுமக்கள் அங்கு வந்த பிறகு, பேருந்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments