ஆற்றில் துணி துவைக்கச் சென்ற பெண்ணிடம் அத்துமீறிய போதை ஆசாமி..!

0 2600

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஆற்றில் துணித் துவைக்க சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற போதை ஆசாமியை, பொதுமக்கள் துவைத்தெடுத்தனர்.

காக்காத்தோப்பை சேர்ந்த பழனி என்பவரின் மகள் சலவைத்தொழில் செய்து வருகிறார்.

இன்று காலை வழக்கம்போல் லட்சுமணன்பட்டி அணைக்கட்டில் துணி துவைப்பதற்காக சென்ற பெண்ணை, வெகுநேரமாக நோட்டமிட்டுக் கொண்டிருந்த போதை ஆசாமி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

அந்தப் பெண் கூச்சலிட்டதையடுத்து, அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து பெண்ணை மீட்டனர். தகவல் அறிந்து வந்த வேடசந்தூர் போலீசார், அந்த ஆசாமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments