பேரூர் கோவில் யானை கல்யாணியின் எடையை குறைக்க அறிவுறுத்தல்..!

0 2189

கோவை பேரூர் கோவில் யானை கல்யாணியின் உடல் எடையை குறைக்க, கால்நடை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

தமிழ்நாடு கால்நடை மற்றும் வனத்துறை சார்பில் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் உள்ள 31 வயதான யானை கல்யாணிக்கு, உடல் எடை மற்றும் இரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், யானையின் மொத்த எடை 4230 கிலோவாக உள்ள நிலையில்,  4000 கிலோ வரை மட்டுமே வைத்து பராமரிக்குமாறு, கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன் அடிப்படையில் உடல் எடையை குறைக்கும் வகையிலான உணவுகள் யானைக்கு வழங்கப்பட உள்ளன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments