மாதச்சந்தா 8 டாலர் செலுத்தினால் டுவிட்டரில் ஆப்பிள் ஐ போன் பயன்படுத்துவோருக்கு புளு டிக் அடையாளம்..!

0 2364
மாதச்சந்தா 8 டாலர் செலுத்தினால் டுவிட்டரில் ஆப்பிள் ஐ போன் பயன்படுத்துவோருக்கு புளு டிக் அடையாளம்..!

டுவிட்டர் நிறுவனம் மாதச்சந்தா 8 டாலருக்கு புளுடிக் அடையாளத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது.

முதல்கட்டமாக ஆப்பிள் ஐ போன் IOS ஆப்பை பயன்படுத்துவோருக்கு விரைவில் இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் அதிகாரி எஸ்தர் கிராப்போர்ட் விளக்கம் அளித்துள்ளார்.

விளம்பரங்களை பாதியாகக் குறைக்கவும் நீங்கள் பின்தொடரும் பிரபலங்களைப் போலவே புளு டிக் அடையாளத்தைப் பெறவும் விரைவில் வாய்ப்புகள் உருவாகும் என்று கூறிய அவர், நீளமான வீடியோக்கள் மற்றும் பதிவுகளைப் போடவும் டிவிட்டரில் மாற்றம் செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

தரமான பதிவுகளுக்கு முன்னிலை அளித்தல், தேடுதல் மற்றும் விளக்கம் நாடுவோருக்கு சாதகமான நிலையை ஏற்படுத்துதல் போன்ற புதிய அம்சங்களும் டுவிட்டரில் இடம்பெற உள்ளன.

ஸ்பாம் மற்றும் போலிக்கணக்குகளை இது கட்டுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் டுவிட்டரின் இந்த முடிவால் அதிருப்தியடைந்துள்ள விளம்பரதாரர்கள் சிலர் தங்கள் விளம்பரங்களை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments