தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் மீது என்.ஐ.ஏ.குற்றப் பத்திரிகை தாக்கல்..!

0 2277
தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் மீது என்.ஐ.ஏ.குற்றப் பத்திரிகை தாக்கல்..!

சர்வதேச தீவிரவாத இயக்கத்தை நடத்தியதாக தாவூத் இப்ராகிம் மற்றும் சோட்டா ஷகீல் உள்ளிட்டோர் மீது தேசியப் புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

டி கம்பெனி என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி இந்தியாவில் குற்றம் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தாவூத் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாவூத் இப்போது தலைமறைவாக உள்ளார்.

இதே போன்று தாவூத்தின் சகோதரர் இப்ராகிம் காஸ்கர், சோட்டா ஷகீல், மற்றும் தீவிரவாத செயல்களுக்காக ஹவாலா பணப்பரிவர்த்தனை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட தாவூதின் மூன்று கூட்டாளிகள் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments