பேராயர் செல்லப்பா சந்தன மரம் எங்கப்பா..? வனத்துறை விசாரணை..! சபை நிர்வாகிகள் பரபரப்பு புகார்..!

0 4434
பேராயர் செல்லப்பா சந்தன மரம் எங்கப்பா..? வனத்துறை விசாரணை..! சபை நிர்வாகிகள் பரபரப்பு புகார்..!

நாகர்கோவில் சிஎஸ்ஐ பேராயர் வீட்டு வளாகத்தில் இருந்த சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தபட்டதாக காவல்துறையிடம் வனத்துறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நிர்வாகிகள் குற்றச்சாட்டி உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிஎஸ்ஐ பேராலய ஆயர் இல்லத்தில் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உள்ளே நின்ற நான்கு சந்தன மரங்களை ஆயர் செல்லப்பாவின் உதவியுடன் சிலர் வெட்டிச் சென்றதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக குமரி சிஎஸ்ஐ பேராய சபையின், நிர்வாக குழுவினர்கள் 8 நபர்கள், உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், வனத்துறை செயலாளர், மாவட்ட வனத்துறை அதிகாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்திருந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் ஆயர் இல்ல வளாகத்தில் சந்தன மரம் வெட்டிக் கடத்தப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

வெட்டப்பட்ட சந்தன மரத்தின் மீதமுள்ள பகுதிகளை மறைத்து வைத்திருந்ததையும் வனத்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் ஆயரின் வீட்டின் உள்ளே நடத்திய சோதனையிலும் ஏராளமான சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சந்தனமரக் கடத்தல் குறித்து இதுவரையிலும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படும் நிலையில் புகார் அளித்தவர்களிடம் விசாரணைக்காக மாவட்ட வன அதிகாரி நேரில் ஆஜராகுமாறு கூறியுள்ளனர்.

இந்த சந்தன மரக் கட்டைகள் வெட்டியது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஎஸ்ஐ பேராய நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை ஆயரின் உதவியாளர்கள் முன்வாசல் கேட்டை பூட்டி சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்ததும், செய்தியாளர்களை விடுவித்ததோடு, தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments