ரஞ்சிதமே.. ரஞ்சிதமே.. மொச்சகொட்ட பல்லழகியை சுட்டு போடப்பட்ட மெட்டாம்பா..! தேனிசையில் தமனும் சளைத்தவரில்லை..!

0 59586
ரஞ்சிதமே.. ரஞ்சிதமே.. மொச்சகொட்ட பல்லழகியை சுட்டு போடப்பட்ட மெட்டாம்பா..! தேனிசையில் தமனும் சளைத்தவரில்லை..!

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் வெளியாகி ரசிகர்களை ஆட்டம்போட வைத்திருக்கும் நிலையில் அந்த பாடலின் மெட்டு, மொச்சக் கொட்ட பல்லழகி என்ற பாடலை சுட்டு போடப்பட்டிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

தேனீ போல சுறுசுறுப்பாக மெட்டமைத்து ரசிகர்களை கவரும் தேவா, அனிருத், இமான் வரிசையில் தற்போது இடம் பிடித்திருப்பவர் வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமன்.எஸ்..!

நடிகர் விஜய்யின் வாரிசு படத்திற்காக தமன் இசையமைப்பில் வெளியாகி உள்ள ரஞ்சிதமே.. பாடல் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டப் பாடலாக மாறியுள்ளது.

பீஸ்ட் படத்தின் ஹலமத்தி ஹப்பீபோ... பாடல் போல ஜானி மாஸ்டர் நடனம் அமைத்திருந்தாலும், விஜய்யை நீண்ட இடை வெளிக்கு பின்னர் காதல் நாயகனாக காட்டி இருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ரஞ்சிதமே பாடல் வெளியான குறுகிய நேரத்தில் யூடியூப்பில் அதிக பார்வைகளை பெற்றுவரும் நிலையில் இந்த பாடலின் மெட்டு, உளவாளி படத்தில் இடம் பெற்ற மொச்ச கொட்ட பல்லழகி பாடலின் மெட்டு போல இருப்பதாக சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்து வருகின்றனர்

ரஞ்சிதமே பாடலின் சரணத்தில் இடம்பெற்ற பீட்டு மட்டுமே மொச்ச கொட்ட பல்லழகி பாடலின் மெட்டு போல இருப்பதாக சிலர் கூறிய நிலையில் , இந்த பாடல் முழுமையாக தமன் இசையமைப்பில் ஏற்கனவே வெளியான ஒஸ்தி படத்தில் இடம் பெற்ற கியூட் பொண்டாட்டி என்ற பாடலின் பாஸ்ட் பீட் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இன்னும் சிலர் ஈஸ்வரன் படத்தில் இடம் பெற்ற மாங்கல்யம் தந்துநானே என்ற பாடலின் மெட்டையும் உள்ளே கலந்துள்ளார் என்று கூறி வருகின்றனர்.

எதனை வேணா காப்பி அடிச்சிக்கோ.. எந்த மெட்ட வேணா சுட்டுக்கோ... எங்களுக்கு பாட்டு பிடிச்சிருக்கு என்று விஜய் ரசிகர்கள் ரஞ்சிதமே பாடலை ஹிட்டாக்கி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments