காரில் கடத்தப்பட்ட இளம்பெண்ணை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு தமிழக போலீசாரிடம் ஒப்படைத்த ஆந்திர போலீசார்..!

0 2311
காரில் கடத்தப்பட்ட இளம்பெண்ணை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு தமிழக போலீசாரிடம் ஒப்படைத்த ஆந்திர போலீசார்..!

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே காரில் கடத்தப்பட்ட இளம்பெண்ணை பொதுமக்கள் உதவியுடன் மீட்ட ஆந்திர போலீசார் தமிழக போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நேற்று மாலை அத்திமாஞ்சேரிப் பகுதியில் காரில் கடத்தப்பட்ட இளம் பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு பொதுமக்கள் அந்த காரை பின் தொடர்ந்துள்ளனர்.

வெளிகரம் வழியில் ஆந்திராவை நோக்கி சென்ற கார் குறித்து தகவல் அறிந்த பள்ளிப்பட்டு போலீசார் ஆந்திர மாநில எஸ்.ஆர்.புரம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. பொதுக்கள் உதவியுடன் காரை மடக்கிப் பிடித்து கடத்தப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டுள்ளனர்.

அத்திமாஞ்சேரி காலனியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் திருமணம் செய்வதற்காக தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்தப் பெண்ணை கடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments