பொள்ளாச்சி சம்பவத்தை படமாக எடுப்பதாக கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது..!

0 2304

கோயம்புத்தூரில், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கும் படத்தில் நடிக்க வைப்பதாக கூறி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவான நபர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2019ஆம் ஆண்டு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி முகநூலில் வந்த நேர்காணல் விளம்பரத்தைப் பார்த்து பொள்ளாச்சியில் உள்ள ஒரு மேன்ஷனில் தங்கியிருந்த கரூரைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரை சந்தித்திருக்கிறார்.

தான் எடுக்கும் படத்தில் மாணவிக்கு முக்கிய கதாப்பாத்திரம் இருப்பதாக கூறியவர், பாலில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் அத்துமீறல் செய்த நிலையில், 18 வயதானதும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

2020ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று இணையம் மூலமாக பதிவுத் திருமணம் செய்து கோவைப்புதூரில் ஒன்றாக வாழ்ந்த நிலையில் 5 மாதங்களுக்கு முன்பு பார்த்திபன் மாணவியை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கடந்த செப்டம்பர் மாதம் மாணவி அளித்த புகாரையடுத்து தலைமறைவான பார்த்திபனை போலீசார் தேடிவந்த நிலையில் அவர் கோவையில் இருப்பதாக கிடைத்த தகவலின்படி அவரை கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments