தம்மைக் கொல்ல நடந்த சதியின் வீடியோ ஆதாரம் வெளியாகும்- இம்ரான் கான்

0 2402

துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காயத்துடன் உயிர் தப்பிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தம்மைக் கொல்ல நான்கு பேர் ரகசியமாக சதி செய்ததாகவும் அதற்கான வீடியோ ஆதாரம் தம்மிடம் இருப்பதாகவும் கூறினார்.

தமது உயிருக்கு பாதகம் ஏற்பட்டால் அந்த வீடியோ வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

பொதுக்கூட்டத்தில் தமது கால்களில் 4 தோட்டாக்கள் பாய்ந்து இருப்பதாக மருத்துவமனையில் இருந்தபடியே தொலைக்காட்சி நேரலையில் தெரிவித்த இம்ரான் கான் ஒரு நாள் முன்பே தம் மீது தாக்குதல் நடக்க இருப்பது தமக்குத் தெரியும் என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments