அடுக்குமாடி குடியிருப்பு லிப்ட்டில் தவறிய இரண்டரை வயது குழந்தையை மீட்டு போலீசில் ஒப்படைத்த டாக்டர்..!
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட்டில் தவறிய குழந்தையை டாக்டர் ஒருவர் மீட்டு போலீசாரிடம் பத்திரமாக ஒப்படைத்தார்.
வேலூர் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் நந்தகுமார் என்பவர் நேற்றிரவு குமணன்சாவடி வழியாக பைபாஸ் சர்வீசில் சென்ற போது இரண்டரை வயதுடைய சிறுவன் ஒருவன் அழுதபடி சாலையில் இருப்பதை பார்த்து சந்தேகம் கொண்டு அவனை மீட்டு பத்திரமாக பூந்தமல்லி போலீசாரிடம் ஒப்படைத்தார்.
விசாரணையில் அந்த சிறுவன் குமணன்சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அர்திக் பாஷாவின் மகன் என்பது தெரிய வந்தது. மேலும் அந்த சிறுவன் லிப்ட்டில் இருந்து தானாக கீழே இறங்கி காவலாளிகளையும் மீறி வெளியே சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் பெற்றோரை அழைத்து அறிவுரை கூறி குழந்தையை ஒப்படைத்தனர்.
Comments