நிலத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் தருவதாகக் கூறி மோசடி..!

0 2118

சென்னையில் நிலத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் தருவதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பணம்பெற்று மோசடியில் ஈடுபட்டதாக பென் பவுண்டேசன் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருகம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அந்நிறுவனத்தின் கவர்ச்சிகரமான விளம்பரத்தை பார்த்து கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவர் 15 லட்ச ரூபாயை இரு தவணைகளாக முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

மாதந்தோறும் வட்டி தருவதாகக் கூறிய அந்நிறுவனம் பணம் தரமால் ஏமாற்றியதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சுந்தரேசன் புகார் அளித்தார்.

இதனிடையே, அந்நிறுவன மேலாளர் சுபாஷ் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகக் கூறி பொய்யான புகார் அளித்து வழக்கை திசை திருப்ப முயன்றதாக அவரை கைது செய்த விருகம்பாக்கம் போலீசார், தலைமறைவாக உள்ள நிறுவன உரிமையாளர் ஆதவனை தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments