சென்னை மாநகராட்சி சார்பில் 200 வார்டுகளில் இன்று மெகா மழைக்கால மருத்துவ முகாம்.!

0 2140

சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் இன்று மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்து வரும் காரணத்தினால் பருவமழைக்கால நோய்களான டெங்கு, ப்ளு என்கின்ற இன்புளுயன்சா, காலரா, டைபாய்டு, சேற்றுப்புண் மற்றும் உடல் உபாதைகள் ஏற்படாமல் தடுக்கும்  வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

இந்த மருத்துவ முகாம்களில் காய்ச்சல் மற்றும் இதர உபாதைகள் கண்டறியப்படுவர்கள் மேல்சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்க அறிவுறுத்தப்படுவார்கள்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments