இரு சக்கர வாகனங்களில் கூச்சலிட்டபடி சென்ற இளைஞர்களை கண்டித்த மாணவியின் தந்தை மீது தாக்குதல்..!

0 3630

மதுரை அரசு மகளிர் கல்லூரி வாசலில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை தட்டிக் கேட்ட மாணவியின் தந்தை தாக்கப்பட்டதால் மாணவிகள் அலறியடித்து ஓடினர்.

மீனாட்சி அரசு கலை கல்லூரி சாலையில் இளைஞர்கள் சிலர் மதுபோதையில் கூச்சலிட்டபடி இருசக்கர வாகனத்தில் அதி வேகத்தில் சென்றுள்ளனர்.

கல்லூரி வாசல் முன்பு நின்று கொண்டிருந்த மாணயின் தந்தை ஒருவர் இதனை கண்டித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், அவரை ஆபாசமாக திட்டி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது

போதையர்களின் ரகளையால் கல்லூரி நுழைவாசல் மூடப்பட்டது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments