கண்டெய்னர் லாரி மோதி, இருசக்கர வாகனம் இழுத்துச் செல்லப்பட்டதில் தந்தை- மகள் பலி

0 2465

கேரள மாநிலம் கொல்லத்தில் அதிவேக கண்டெய்னர்  லாரி மோதி, இருசக்கர வாகனத்துடன் சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட தந்தையும் மகளும் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது .

கோபகுமார் என்பவர் சாத்தனூர் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மகளை இருசக்கர வாகத்தில் பள்ளிக்கு கூட்டிச் சென்று கொண்டிருந்தார்.

மயிலக்காடு தேசிய நெடுஞ்சாலை பகுதியில், பின்னால் வந்த அதிவேக லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி, 20 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றதில் இருவரும் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய  ஓட்டுநர் கவுரவ் குமாரை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments