தமிழ்நாட்டில் 44 இடங்களில் 6 -ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதி

0 2469

தமிழ்நாட்டில் 44 இடங்களில் வருகிற 6 ந்தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  .இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன்,கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூரில் பல்லடம், கன்னியாகுமரியில் அருமனை, நாகர்கோவில் ஆகிய  6 இடங்களை தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்கலாம் என்று ஆணை பிறப்பித்துள்ளார்.

காவல்துறை ஏற்கனவே அனுமதி வழங்கிய 3 இடங்கள்  உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ள நீதிபதி,  அணிவகுப்பு ஊர்வலத்தில் காவல்துறை விதிக்கும் நிபந்தனைகள் பின்பற்ற வேண்டும் என்று  குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments