இதற்கு தாண்டா உங்களுக்கு குழந்தையே பிறக்காமல் இருந்திருக்கு..!பிஞ்ச போயி இப்படியாடா செய்வீங்க..?

0 4889

குழந்தை இல்லை என்று கூறி உறவுக்கார பெண்ணின் 4 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச்சென்ற தம்பதி , அந்த சிறுமியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கணவனின் விபரீத செயலுக்கு துணைபோன பெண்ணின் கொடுஞ்செயல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செங்குளத்துப் பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் இவரது மனைவி கீர்த்திகா இந்த தம்பதியினருக்கு திருமணமாகி சில ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்று கூறப்படுகின்றது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற போது தங்களிடம் பாசமாக விளையாடும் அவர்களது 4 வயது பெண் குழந்தையை கடந்த 10 நாட்களுக்கு முன்பு தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

குழந்தை இல்லாத ஏக்கத்தை போக்கும் வகையில் அந்த சிறுமியை சில தினங்கள் தங்களுடன் வைத்திருந்து, மீண்டும் கொண்டு வந்து விடுவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.

குழந்தை இல்லாத கீர்த்திகா கேட்டதால் தனது ஒரே மகளை , அவரது தாயும் அன்போடு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த நிலையில் வியாழக்கிழமை சிறுமி தனது வீட்டில் வழுக்கி விழுந்து காயமடைந்ததாக கூறிய கீர்த்திகா, சிறுமியை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்திருப்பதாக சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பரிசோதித்த போது, சிறுமியின் உடல் எங்கும் சூடு வைத்த தீக்காயங்கள் இருந்தது பிறப்பு உறுப்பிலும் கடுமையான காயங்கள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் . தீவிர சிகிச்சையில் இருந்த ஷிவானி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.

மருத்துவர்கள் அளித்த தகவலின் பேரில் வடமதுரை போலீசார் ராஜேஷ் குமார் - கீர்த்திகா தம்பதியை பிடித்து விசாரித்தனர். இதில் குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

சிறுமியிடம் செல்போனில் விளையாடுவது போல அத்து மீறலில் ஈடுபட்ட காமுகன் ராஜேஷ்குமார், இதை வெளியில் சொல்லக்கூடாது என்று சூடு வைத்து மிரட்டி வந்துள்ளான்.

கணவனின் கொடூர செயலுக்கு கீர்த்திகாவும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜேஷ்குமார் சிறுமியிடம் கடுமையாக நடந்து கொண்டதால் சிறுமி மயக்க நிலைக்கு சென்றுள்ளார்.

அவர் உயிரிழந்ததாக கருதிய இந்த கேடி தம்பதி, சிறுமி வீட்டில் வழுக்கி விழுந்துவிட்டார் என்று பொய்யான காரணத்தை கூறி மருத்துவமனையில் சேர்த்து நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து 4 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்ததாக, ராஜேஷ்குமாரையும் அவரது மனைவி கீர்த்திகாவையும் போக்சோ வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதற்கு தாண்டா உங்களுக்கு குழந்தையே பிறக்கவில்லை என்று கூறி பெற்றோரும் உற்றாரும் பதறும் இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments