சில்லறை விலை ஆரஞ்சு பால் பாக்கெட்டு விலை மட்டும் மாற்றம் - ஆவின்

0 2610

மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஊதா, பச்சை நிற பால் பாக்கெட் விலையில் மாற்றமில்லை என்றும், சில்லரை விற்பனைதாரர்களுக்கு மட்டும் கொழுப்பு சத்து நிறைந்த ஆரஞ்சு பால் விலை  நாளை முதல் லிட்டருக்கு 60 ரூபாயாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் ஆவின் தெரிவித்துள்ளது. 

பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 32 ரூபாயிலிருந்து 35ஆகவும், எருமை பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 41 ரூபாயிலிருந்து 44 ரூபாயாகவும் நாளை முதல் உயர்த்தபடுவதாகவும், இதனால் ஏற்படும் கூடுதல் செலவீனத்தை ஈடு செய்ய ஆரஞ்சு நிற பால் விலை மட்டும் மாற்றப்படுகிறது என்றும் ஆவின் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரத்தில் அட்டைதாரர்களுக்கு எந்த மாற்றமும் இல்லாமல் லிட்டர் 46 ரூபாய்க்கு தொடர்ந்து விநியோகிக்கப்படும்  என்றும் ஆவின் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments