அரசுப்பேருந்தில் பயணித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. பேருந்து கண்ணாடிகளை உடைத்து பெண்கள் போராட்டம்!

0 2977

கொலம்பியாவில், அரசுப்பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதை கண்டித்து பெண்கள் பேருந்து கண்ணாடிகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹிலாரி கேஸ்ட்ரோ என்ற 17 வயது சிறுமி, அரசுப்பேருந்தில் தான் பயணித்தபோது உடமைகள் பறிக்கப்பட்டு, பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இதுகுறித்து போலீசில் புகாரளிக்க முற்பட்டபோது ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும் சமூக வலைத்தளத்தில் காணொலி வெளியிட்டார்.

இதை கண்டித்து போராட்டத்தில் குதித்த பெண்கள், அரசுப்பேருந்துகள் மீது கண்டன வாசகங்களை எழுதி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments