மதுபோதையில் ரயில் இஞ்ஜின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்திய நபர் கைது..!

0 2570
மதுபோதையில் ரயில் இஞ்ஜின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்திய நபர் கைது..!

சென்னையில் மதுபோதையில் ரயில் இஞ்ஜின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொருக்குபேட்டையில் இருந்து வியாசர்பாடி வழியாக செல்லக்கூடிய சரக்கு பெட்டக ரயிலின் முன்பக்க கண்ணாடி உடைந்து, ஓட்டுநரின் கையில் வீக்கம் ஏற்படும் அளவிற்கு மர்மநபர் ஒருவர் கல்வீசி கடந்த 21-ந் தேதியன்று தாக்குதல் நடத்தினார்.

இச்சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வைத்து விசாரணை நடத்திய ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார், ஆர்.கே நகர் போலீசார் உதவியுடன் கொருக்குபேட்டையைச் சேர்ந்த பூபாலன் என்ற நபரை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments