மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் 7 மற்றும் 8 தேதிகளில் ரஷ்யா பயணம்..!

0 2046
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் 7 மற்றும் 8 தேதிகளில் ரஷ்யா பயணம்..!

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் 7 மற்றும் 8ம் தேதிகளில் ரஷ்யா செல்கிறார். இருநாட்டு நல்லுறவுகள் மற்றும் உக்ரைன் போர் நிலவரம் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்து முக்கிய சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளார்.

ஜெய்சங்கரின் ரஷ்யப் பயணம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி , உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு வெளிப்படையானது என்று தெரிவித்தார்.

இருதரப்பு வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட இதர முக்கியப் பிரச்சினைகள் இந்தப் பேச்சுவார்த்தையில் கூடுதலான முக்கியத்துவம் பெறும் என்றும் அரிந்தம் பாக்ச்சி விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments