மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணிகளால் சென்னையில் ஒரு வாரம் போக்குவரத்து மாற்றம்..!

0 2323
மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணிகளால் சென்னையில் ஒரு வாரம் போக்குவரத்து மாற்றம்..!

சென்னையில் கவிஞர் பாரதிதாசன் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறவுள்ளதால் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாளை முதல் 11-ஆம் தேதி வரை பாரதிதாசன் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.

டி.டி.கே சாலை சேமியர்ஸ் சந்திப்பில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு வரை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படும் என்றும், அண்ணா சாலையில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை வழியாக டி.டி.கே சாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments