பாகிஸ்தானில் இம்ரான்கான் கலந்துகொண்ட பேரணியில் துப்பாக்கிச்சூடு

பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர், லாகூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வசிராபாத் நகரில் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற பேரணியில் மர்ம நபர்கள் இருவர், திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் இம்ரான்கான், முன்னாள் ஆளுநர் சிந்து இம்ரான் இஸ்மாயில் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்களில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், கைதான மற்றொரு நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இம்ரான்கான் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும், அதனால் அவரை கொல்ல முயற்சித்ததாகவும் கூறிய கொலையாளி, தனக்கு பின்னால் யாருமில்லை என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Comments