பள்ளி மாணவியை இழுத்துச்சென்று கழுத்தை அறுத்த கொடூரன்..! பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

0 9191
பள்ளி மாணவியை இழுத்துச்சென்று கழுத்தை அறுத்த கொடூரன்..! பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் பள்ளி முடிந்து தனியாக வீடுதிரும்பிய மாணவியை பின் தொடர்ந்து  சென்று கழுத்தை அறுத்து விட்டு ஓடிய போக்சோ இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி பவானிசாகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு பவானிசாகரில் இருந்து பகுடுதுறை செல்லும் சாலையில் நடந்து சென்றார். 

அப்போது மாணவியை பின் தொடர்ந்து சென்ற இளைஞர் ஒருவர் மாணவியின் கையைப்பிடித்து மறைவான பகுதிக்கு இழுத்துச்சென்றார்

திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தில் வைத்து அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அருகே சென்று தடுக்க முயன்ற போது அந்த வாலிபர் தப்பி ஓடி மறைந்தார்

கழுத்தில் ரத்தக்காயம்பட்ட பள்ளி மாணவியை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பவானிசாகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மாணவியின்  கழுத்தில் கத்தி வைத்து அறுத்து கொலை செய்ய முயன்ற வாலிபர் பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகன் நவீன்குமார் என்பதும், ஏற்கனவே இந்த மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டு போக்சோ வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற நவீன்குமார் ஜாமினில் வெளியே வந்ததும் தெரிய வந்துள்ளது.

முதலில் கொடுத்த புகாருக்கு பழிக்கு பழிவாங்கும் விதமாக மாணவியை பின் தொடர்ந்து சென்று  அவரை தாக்கியது தெரியவந்தது. போலீசார் நவீன்குமார்  வலை வீசி தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments